தொகுதி மறுவரையறை குறித்து வீடியோ வெளியிட்டுள்ள கனிமொழி, “மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறு வரையறை நடந்தால், மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி பல ஆண்டுகளாக மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையும், மக்கள் தொகையை பொருட்படுத்தாத மாநிலங்களுக்கு அதிக தொகுதிகள் கிடைக்கும், பாஜகவின் சொந்த அரசியலுக்காக மக்கள் தொகையை கட்டுப்படுத்த மாநிலங்களை தண்டிக்கக் கூடாது” என அவர் கூறியுள்ளார்.