காட்டுப்பன்றி தொல்லை - கேரளாவிடம் உதவிகோரிய தமிழகம்!

1541பார்த்தது
காட்டுப்பன்றி தொல்லை - கேரளாவிடம் உதவிகோரிய தமிழகம்!
கேரளாவில் காட்டுப்பன்றி தொல்லையை எதிர்கொள்வதற்கான உத்திகள் குறித்து அறிந்து கொள்ள தமிழகம் கேரளாவின் உதவியை நாடியுள்ளது. பாலக்காடு மாவட்டம் ஒட்டப்பாலத்தில் காட்டுப்பன்றிகளால் ஏற்படும் பயிர் சேதத்தை கேரள அரசின் வனத்துறை எவ்வாறு சமாளித்தது என்பதை ஆய்வு செய்ய தமிழக அரசு அமைத்த குழு ஒன்று சென்றது. தமிழக வனவிலங்கு காப்பாளர் தலைமையிலான குழுவில் விவசாயிகள், வனம் மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் உள்ளனர். மே 2022-இல், குறிப்பிட்ட நிபந்தனைகளின் கீழ் காட்டுப்பன்றிகளை சுட உள்ளூர் உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்களுக்கு கேரள அரசு அனுமதித்தது. இதே நடைமுறை தமிழகத்திலும் பின்பற்றப்பட வாய்ப்புள்ளது.

தொடர்புடைய செய்தி