ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் கோபாலபட்டினத்தை சேர்ந்தவர் நாகேந்திர பாபு. கடந்த 11 மாதங்களுக்கு முன்பு வசந்தா என்ற பெண்ணுடன் இவருக்கு திருமணம் ஆகியுள்ளது. இந்நிலையில், வசந்தா திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்த விசாரணையில், நாகேந்திரபாபு, வசந்தாவிடம் ஆபாச படங்களை காட்டி, அந்த படங்களில் வருவது போல செய்யும்படி துன்புறுத்தி வந்துள்ளார். இதனை பொறுக்க முடியாத வசந்தா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். நாகேந்திர பாபுவை போலீசார் கைது செய்துள்ளனர்.