உ.பி.,: திருமணமான 15 நாட்களில் கணவனை கொலை செய்த மனைவி, அவரது காதலன் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவுரையா மாவட்டத்தைச் சேர்ந்த திலீப்பிற்கு பிரகதி என்பவருடன் மார்ச் 5-ல் திருமணம் நடந்துள்ளது. பிரகதி அனுராக் யாதவ் என்பவரை காதலித்ததால், அவர்களின் உறவுக்கு தடையாக இருந்த தீலீப்பை கொலை முடிவெடுத்து, கூலிப்படைக்கு ரூ.2 லட்சமும் கொடுத்துள்ளனர். பின்னர் மார்ச் 19 அன்று திலீப்பை ஒரு வயலுக்கு கூட்டிச் சென்று சுட்டுக் கொன்றுள்ளனர். சிசிடிவி உதவியால் குற்றவாளிகளை போலீசார் கண்டறிந்தனர்.