முன்பு ஒரு காலத்தில் போக்குவரத்திற்காக பயன்படுத்தப்பட்ட மூன்று சக்கர வண்டி தான் ரிக்ஷா. தற்போது இருக்கும் ஆட்டோக்களின் முன்னோடி என்று இதை சொல்லலாம். ரிக்ஷா என்கிற வார்த்தை தமிழோ, ஹிந்தியோ ஆங்கிலமோ கிடையாது. ஜப்பானிய வார்த்தையான 'ஜின்ரிகிஷா' என்பதிலிருந்து வந்ததாக மொழி வல்லுநர்கள் கூறுகின்றனர். இதன் பொருள் மனிதனால் இயக்கப்படும் வாகனம் என்பதே ஆகும். தற்போது ரிக்ஷாக்கள் முற்றிலும் அழிந்து போய் மோட்டார் வாகனங்கள் மட்டுமே புழக்கத்தில் உள்ளன.