கேரளா மாநிலம் கோழிக்கோடு கடற்கரையில் கார் ஓட்டி ரீல்ஸ் எடுக்க முயன்றபோது நண்பர் ஓட்டி வந்த கார் மோதியதில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்த ஆல்வின் (20) என்பவர் உயிரிழந்துள்ளார். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றாலும் அவரது உயிரை காப்பாற்ற முடியவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன் சவுதி அரேபியாவில் இருந்து ஆல்வின் சொந்த ஊர் திரும்பிய நிலையில் இந்த சோக சம்பவம் நடந்துள்ளது.