மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான பட்டாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இன்று (மார்ச் 18) திருக்கல்யாணமும், நாளை (மார்ச் 19) திருத்தேரோட்டமும் நடைபெற உள்ளது. இந்நிலையில் கோயில் முன்பாக உள்ள திருத்தேரை அலங்கரிக்கும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.