43 வயதில் திருமணம் ஏன்? நடிகை விளக்கம்

84பார்த்தது
43 வயதில் திருமணம் ஏன்? நடிகை விளக்கம்
1997ஆம் ஆண்டு சூரிய வம்சம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை லாவண்யா. படையப்பா, சங்கமம், உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது சீரியல்களில் நடித்து வரும் அவர், கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் 43 வயதில் திருமணம் ஏன் என்பதை தனது திருமண நாளில் தெரிவித்துள்ளார். தனது குடும்ப சூழ்நிலை காரணமாக திருமணம் செய்யாமல் இருந்தேன். ஒரு திருமண நிகழ்வில் எனது கணவரை சந்தித்தேன். இருவரும் காதலித்து வந்த நிலையில் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்தோம் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி