ஐபிஎல் தொடருக்காக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், 2024 ஐபிஎல் தொடரை வரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக ஐபிஎல் சேர்மன் அருண் துமால் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், "ஐபிஎல் போட்டியின் அட்டவணை இரண்டு பகுதிகளாக அறிவிக்கப்படலாம். பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் அது முடிவு செய்யப்படும். சென்னை - குஜராத் அணிகளுக்கு இடையேயான முதல் போட்டியை சேப்பாக்கத்தில் நடத்த திட்டமிட்டு வருகிறோம்" என அவர் தெரிவித்துள்ளார்.