41 உயிரை பலி வாங்கிய தீவிபத்து..! பேராசையே காரணம்

72பார்த்தது
41 உயிரை பலி வாங்கிய தீவிபத்து..! பேராசையே காரணம்
குவைத் நாட்டின் மங்காஃப் நகரில் உள்ள 6 மாடி கட்டிடத்தில் இன்று (ஜூன்12) பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இந்த துயர சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்தனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. கட்டிடத்தின் உரிமையாளரான கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஆபிரகாமை கைது செய்ய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. சம்பவம் குறித்து நாட்டின் துணை பிரதமர் ஷேக் ஃபஹத் யூசுப் சவுத் கூறும்போது, “துரதிர்ஷ்டவசமாக கட்டிடத்தின் உரிமையாளர்களின் விதிமீறல் மற்றும் பேராசை தான் இது போன்ற துயரமான விஷயங்களுக்கு வழிவகுக்கிறது.” என்றார்.

தொடர்புடைய செய்தி