பேட்மிண்டன் பேட்டால் பறிபோன 6 வயது சிறுமி உயிர்

79பார்த்தது
பேட்மிண்டன் பேட்டால் பறிபோன 6 வயது சிறுமி உயிர்
நியூஜெர்சியில் உள்ள ஸ்டாக்ஹோமை சேர்ந்தவர் 6 வயது சிறுமி லூசி மோர்கன். இவர் கடந்த ஜுன் 1-ஆம் தேதி, தனது குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ளார். அங்கு தனது சகோதரனுடன் பேட்மிண்டன் கேம் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது லூசியின் சகோதரரின் கையில் இருந்த பேட்மிண்டன் பேட்டின் அலுமினிய தகடு மரக்கைப்பிடியில் இருந்து கழன்று, சிறுமியின் தலையிலேயே தாக்கியுள்ளது. இதில் கூர்மையான அலுமினிய தகடு லூசியின் மண்டை ஓட்டில் சிக்கியுள்ளது. இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார்.

தொடர்புடைய செய்தி