மேகதாது அணை விவகாரத்தை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ளுங்கள் என பிரதமர் நரேந்திர மோடி கூறியிருப்பது தற்கொலைக்கு சமம் என அமைச்சர் துரைமுருகன் பேட்டியளித்துள்ளார். வேலூரில் செய்தியாளர்களை சந்தித்த துரைமுருகன், "முன்னாள் பிரதமர் பலர் பேச்சுவார்த்தையில் தீர்வு காண பரிந்துரைத்தார்கள். ஆனால், இதுவரை 38 முறை பேசியும் சுமூக தீர்வு ஏற்படவில்லை என்பதால்தான் காவிரி பிரச்சனை நடுவர் மன்றத்துக்கு சென்றது” என்று கூறியுள்ளார்.