தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கர்நாடக அரசுகள் பஞ்சுமிட்டாய்க்கு தடை விதித்தது தெரிந்ததே. பஞ்சுமிட்டாயில் நச்சுத்தன்மை கொண்ட ரோடமின் பி என்ற வேதிப்பொருள் சேர்க்கப்படுவதே அதற்கு காரணம் . அதே வேதிப்பொருள் அடர் நிறங்கள் கொண்ட உணவுப் பொருட்கள் அனைத்திலும் பயன்படுத்தப்படுவது தற்போதைய ஆய்வில் தெரிய வந்துள்ளது. எனவே கடைகள் அல்லது ஹோட்டல்களில் அடர் நிறுத்துடன் உணவுப் பொருட்கள் இருந்தால் அதனை தவிர்க்கும் படி தமிழக சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.