செய்தித்தாள்களின் கீழே 4 வண்ணங்களில் வட்டங்கள் கொடுக்கப்பட்டிருக்கும். இது CMYK என்கிற மாதிரியை குறிக்கும். C என்பது சியான், M என்பது மெஜந்தா, Y என்பது மஞ்சள், K என்பது கருப்பு. செய்தித்தாள்களை வண்ணங்களில் அச்சிடும் பொழுது, இந்த 4 வண்ணங்கள் இல்லையென்றால் படங்கள் நேர்த்தியாக வராது. மங்கலாக இருக்கும். எனவே இந்த 4 வண்ணங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதை குறிக்கும் வகையில் செய்தித்தாள்களின் கீழே அச்சிடப்படுகின்றன.