நமது நெஞ்சுப் பகுதியிலுள்ள சுவாசக்குழாயிலும், நுரையீரல் பகுதியிலும் உருவாகும் ஒரு கெட்டியான ஜெல் போன்ற திரவம் சளி ஆகும். சளி பிடிக்காமல் இருக்க மாசு, தூசி ஆகியவற்றில் நிற்காதீர்கள். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதோடு தினமும் மூச்சுப்பயிற்சி, நடைப்பயிற்சி செய்ய வேண்டும். சளி இருக்கும் சமயங்களில், திரவ உணவுகளை அதிகமாக எடுத்துக்கொள்ளலாம். இது, உடலில் நீர்ச்சத்து குறையாமல் பாதுகாக்கும்.