இந்தியாவில் விதிக்கப்படும் வரிகள் அதிகளவில் இருப்பதாக விமர்சனங்கள் இருக்கும் சூழலில் ரூ.11 கோடி பரிசாக வென்றுள்ள உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு விதிக்கப்பட்டிருக்கும் வரி விகிதங்கள் அதிர்ச்சியடைய வைக்கிறது. வருமான வரி 87A கீழ் ரூ.3.28 கோடியும், கூடுதல் கட்டணமாக ரூ.1.21 கோடியும், சுகாதாரம், கல்வி cess வரியாக ரூ.17.98 லட்சம் என மொத்தமாக ரூ.4.67 கோடி ரூபாய் வரியாக வசூலிக்கப்படும். இது, அவர் மொத்தமாக வெற்ற பரிசில் 42% ஆகும்.