முள்ளங்கியை அதன் இலைகளுடன் சேர்த்து சாப்பிட்டால், செரிமான பிரச்சனைகளை சமாளிக்கலாம் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். முள்ளங்கி மற்றும் அதன் இலைகள் நாள்பட்ட அமிலத்தன்மையால் அவதிப்படுபவர்களுக்கு ஒரு சிறந்த மருந்தாகும். ள்ளங்கியை கல் உப்புடன் சேர்த்து உட்கொண்டால், செரிமானம் முழுமையாக சீராக இருக்கும். முள்ளங்கியை சாப்பிடுவதால் மஞ்சள் காமாலை பிரச்சனையில் இருந்து விடுபடலாம். சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகள் உள்ளவர்கள் முள்ளங்கியை உட்கொள்ள வேண்டும்.