வார விடுமுறை எதிரொலி - கறிக்கோழி விலை உயர்வு

64614பார்த்தது
வார விடுமுறை எதிரொலி - கறிக்கோழி விலை உயர்வு
வார விடுமுறை நாட்களில் அசைவ உணவை பெரும்பாலான மக்கள் சாப்பிட விரும்புவர். வாரந்தோறும் ஞாயிறுக்கிழமைகளில் சிக்கன் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுவதை பார்க்க முடியும். எனவே கோழியின் விலையும் அவ்வபோது உயர்ந்து மக்களுக்கு ஷாக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. அந்தவகையில் இன்று நாமக்கல்லில் ஒரு கிலோ கோழி விலை ரூ.5 உயர்ந்து ரூ.108 க்கு விற்பனையாகிறது. எனவே மற்ற மாவட்டங்களில் கிலோவுக்கு ரூ.20 வரை உயர வாய்ப்புள்ளது என்று கணிக்கப்படுகிறது. மேலும் முட்டை கொள்முதல் விலை 20 காசுகள் குறைந்து ரூ.4.60 க்கு விற்பனையாகிறது.

தொடர்புடைய செய்தி