தந்தை பெரியாரின் 146வது பிறந்தநாளான இன்று தவெக தலைவர் விஜய் X பக்கத்தில் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். அதில் சாதி, மத ஆதிக்கம் மற்றும் மூடப்பழக்க வழக்கங்களால் விலங்கிடப்பட்டுக் கிடந்த தமிழக மக்களிடையே விழிப்புணர்வை விதைத்தவர். மக்களை பகுத்தறிவு மனப்பான்மையுடன் போராடத் தூண்டியவர். பகுத்தறிவு பகலவன், பெரியார் அவர்களின் பிறந்தநாளில் அவர் வலியுறுத்திய சமத்துவம், சமூக நீதி, சம உரிமை பாதையில் பயணிக்க உறுதி ஏற்போம்” என பதிவிட்டுள்ளார்.