மும்மொழி கொள்கைக்கு எதிராக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது, "பதவியை பறித்தாலும், சிறையில் அடைத்தாலும், உயிரை கொடுக்க வேண்டியிருந்தாலும் மொழி திணிப்பை தடுப்போம். இந்தி தேசியமொழி என்பதும், சமஸ்கிருதம் முதன்மை மொழி என்பதும் வடிக்கட்டிய பொய். தென்னிந்திய மொழிகளை படிக்கும் வாய்ப்பு தமிழக இளைஞர்களுக்கு கிடைக்கவில்லை என ஆளுநர் புதுச்சரடு விடுகிறார். பாஜக ஆளும் வட மாநிலங்களில், எத்தனை வட இந்திய மொழிகளை கற்றுத்தருகிறார்கள்?. இதற்கு ஆளுநரிடம் பதில் இருக்கிறதா?" என்றார்.