வக்ஃப் வாரியத்தில் பல்வேறு மாற்றங்களை சட்டத்தில் மேற்கொள்ளும் வகையில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு உருவாக்கியதையடுத்து மசோதாவுக்கு ஆதரவாக மக்களவையில் 288 வாக்குகளும், எதிராக 232 வாக்குகளும் பதிவாகின. தமிழகத்தில் உள்ள பிரதான கட்சிகள் இந்த மசோதாவுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. துணை முதல்வர் உதயநிதி கூறும்போது, “வக்ஃப் மசோதாவை தொடர்ந்து எதிர்ப்போம்" என்றார்.