வயநாடு நிலச்சரிவு சம்பவத்திற்கு எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவரது எக்ஸ் தள பக்கத்தில், "வயநாடு நிலச்சரிவு செய்தியறிந்து மிகவும் வேதனையடைந்தேன். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல். கேரள முதலமைச்சர் பினராயி விஜயனிடமும், வயநாடு மாவட்ட ஆட்சியரிமும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மீட்புக்கு உதவி தேவைப்பட்டால் எங்களை அணுகுமாறு கூறியுள்ளேன். தேவையான அனைத்து உதவிகளையும் செய்யுமாறு மத்திய அமைச்சர்களிடம் பேசுகிறேன்" என பதிவிட்டுள்ளார்.