சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மற்றும் தண்டேவாடா மாவட்டங்களின் எல்லையில் உள்ள அடர்ந்த வனப்பகுதியான அபுஜ்மாத் பகுதியில் நக்சலைட்டுகள் நடமாட்டம் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதனால் அப்பகுதியில் போலீசாரும், பாதுகாப்பு படையினருக்கு இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். கடந்த 2 தினங்களாக நக்சலைட்டுகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில், நான்கு நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர். தொடர்ந்து, அப்பகுதியில் பாதுகாப்புப்படையினர் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.