வயநாடு நிலச்சரிவு: ஆய்வுக்கு செல்கிறார் மோடி!

80பார்த்தது
வயநாடு நிலச்சரிவு: ஆய்வுக்கு செல்கிறார் மோடி!
கேரள மாநிலம் வயநாடு முண்டகை, சூரல்மலை-யில் கடந்த மாதம் 30ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 413 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து அப்பகுதி மக்கள் தங்களது குடும்பங்களை இழந்து வாடி வருகின்றனர். இந்த நிலையில், நிலச்சரிவு பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக வருகிற ஆகஸ்ட் 10ஆம் தேதி பிரதமர் மோடி வயநாட்டுக்கு நேரில் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேரில் சென்று மக்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி