வயநாடு நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 84 ஆக உயர்வு

67பார்த்தது
வயநாடு நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 84 ஆக உயர்வு
கேரளா மாநிலம் வயநாட்டில் அதிகாலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 84ஆக அதிகரித்துள்ளது. நிலச்சரிவில் சிக்கி காயமடைந்தவர்களில் இதுவரை 116 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மண் மற்றும் கட்டட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியும் நடந்து வருகிறது. வயநாடு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் மீட்புப் பணியும் முடுக்கி விடப்பட்டுள்ளது. மேலும் இன்றும் நாளையும் கேரளாவில் துக்கம் அனுசரிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி