“1000 மெட்ரிக் டன் கொள்ளளவில் கிடங்கு கட்டப்படும்”

76பார்த்தது
“1000 மெட்ரிக் டன் கொள்ளளவில் கிடங்கு கட்டப்படும்”
சட்டப்பேரவையில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மானியக் கோரிக்கை நடைபெற்றது. அப்போது, “விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் விவசாய இடுபொருட்கள் வழங்கப்படுவதை உறுதி செய்யவும், விவசாயப் பருவத்தை முன்னிட்டு இடுபொருட்களை இருப்பு வைத்திருக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. அதனடிப்படையில், ராமநாதபுரத்தில் உள்ள பட்டினம்காத்தானில் தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம் மூலம் 1000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கிடங்கு கட்டப்படும்” என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி