ஹரியானா, காஷ்மீரில் இன்று வாக்கு எண்ணிக்கை

56பார்த்தது
ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (அக்., 08) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. ஜம்மு காஷ்மீரில் செப்., 18, 25 மற்றும் அக்., 1 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றன. இந்த தேர்தலில் 63.88% வாக்குகள் பதிவாகியிருந்தது. அதே போல் ஹரியானாவில் அக்., 5ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. அங்கு 65.65% வாக்குகள் பதிவாகியிருந்தது.

நன்றி: @ECISVEEP

தொடர்புடைய செய்தி