விருதுநகர்: சைக்கிள் மீது பைக் மோதல்: முதியவர் பலி

61பார்த்தது
விருதுநகர்: சைக்கிள் மீது பைக் மோதல்: முதியவர் பலி
விருதுநகர் சத்திர ரெட்டியாபட்டி அருகே உள்ள கே.உசிலம்பட்டி பகுதியைச் சார்ந்தவர் சீதாராம் (74). இவர் தனது சைக்கிளில் மதுரை - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் விருதுநகர் அருகே சர்வீஸ் சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது மதுரையைச் சார்ந்த ரவிச்சந்திரன் என்பவர் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம் அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் ஒட்டி வரப்பட்டு சீதாராம் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் சீதாராமன் சம்பவ இடத்தில் பலியாகி உள்ளார். இது குறித்து அவருடைய மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் ஊரக காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய வருகிறார்கள்.

தொடர்புடைய செய்தி