அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம்

50பார்த்தது
* புற நோயாளிகள் சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளித்த பின்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் *

நேற்று சென்னை கிண்டி உள்ள அரசு மருத்துவமனையில் தனது தாய்க்கு மருத்துவர் பாலாஜி என்பவர் சரியான முறையில் சிகிச்சை அளிக்கவில்லை என கூறி சிகிச்சை பெற்று வந்த தாயின் மகன் விக்னேஷ் என்பவர் அரசு மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது.

மருத்துவர் பாலாஜி தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து நேற்றிலிருந்து அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டத்திலும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வைத்து அரசு மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய இளைஞர் விக்னேஷை என்ற இளைஞரை கண்டித்தும், மேலும் தமிழக அரசு மருத்துவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பி 50க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தால் புற நோயாளிகள் பாதிக்கப்படக்கூடாது என்பதை உணர்ந்து புற நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் நேரம் காலை 8 மணி முதல் 12 மணி வரை புற நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துவிட்டு 12 மணிக்கு மேல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி