3. 95 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களைதுணை முதல்வர் வழங்கினார்.

78பார்த்தது
விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி கலை அரங்கில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 30 பேருக்கு ரூபாய் 22 லட்சத்து 10 ஆயிரத்து 218 மதிப்பிலான சுயதொழில் புரிந்திட மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் பெறுவதற்கான ஆணை, ஆவின் விற்பனை நிலைய அனுமதி ஆணை மற்றும் 3 சக்கர வாகனங்களை வழங்குகினார். முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற 2, 111 பேருக்கு 42 லட்சத்து 96, 000 மதிப்பிலான சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்குகினார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் 450 ஊராட்சிகளைச் சார்ந்த 564 பேருக்கு ரூ. 2 கோடியே 84 லட்சத்து 64 ஆயிரத்து 798 மதிப்பிலான டாக்டர். கலைஞர் விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் 255 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூபாய் 45 லட்சத்து 38 ஆயிரத்து 195 மதிப்பிலான இலவச வீட்டு மனைப் பட்டாக்களை
வழங்கினார். மொத்தம் 2, 386 பேருக்கு ரூ. 3 கோடியே 95‌ இலட்சத்து 9ஆயிரத்து 211 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன், விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர்,
அமைச்சர்கள்
தங்கம்தென்னரசு, கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி