விருதுநகர் மாவட்டம் திருச்சுழி நகர்ப் பகுதியில் நடிகர் விஜய் யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் புதிய ஒன்றிய அலுவலகம் திறக்கப்பட்டது.
திருச்சுழி மின்வாரிய அலுவலகம் எதிரே திருச்சுழி ஒன்றியத்திற்கான தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய அலுவலகத்தை தமிழக வெற்றிக் கழகத்தின் விருதுநகர் கிழக்கு மாவட்ட தலைவர் தளபதி செல்வம் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இதனையடுத்து, குழந்தைகள் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
மேலும், அமமுக மற்றும் ஆம் ஆத்மி உள்ளிட்ட மாற்றுக் கட்சியினர் மாவட்ட தலைவர் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். மேலும் 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தலைவர் முன்னிலையில் த. வெ. க வில் இணைந்தனர்.
இந்த நிகழ்ச்சியில், திருச்சுழி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள்
J. முத்து மணிகண்டன்,
K. வழி விட்டான்,
சங்கர் கணபதி,
கணேசமூர்த்தி,
சசிகலா,
கனி,
ராஜேந்திரன் மற்றும்
திருச்சுழி ஒன்றிய நிர்வாகிகள்
பெரியசாமி,
அழகு குமார் ,
முத்துக்குமார் ,
மாரிமுத்து, பாலமுருகன் மற்றும் திருச்சுழி ஒன்றிய வழக்கறிஞர் பிரிவு நிர்வாகி
கார்த்தி மற்றும் திருச்சுழி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.