நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று (நவ.25) தொடங்கி டிச.20ம் தேதி வரை நடைபெறுகிறது. குளிர்கால கூட்டத் தொடரில் அதானி மீதான அமெரிக்காவின் புகார் உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு இருந்தனர். அதன்படி, அதானி லஞ்சப் புகார் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து எதிர்க்கட்சியினர் குரல் எழுப்பினர். இதனால் ஏற்பட்ட சலசலப்பால் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் சற்று நேரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.