உங்கள் வீடு மற்றும் தெருவில் ஏற்படும் மின்சார பிரச்சனைகளுக்கு TANGEDCO செயலி மூலம் தீர்வு காண முடியும். மின் தடை ஏற்பட்டால், மின்சாரம் திருடப்பட்டால், கூடுதல் மின் கட்டணம் வந்தால், தீ விபத்து, பழுதான நிலையில் இருக்கும் மின் கம்பம் என எந்த வகையான பிரச்சனையாக இருந்தாலும் இந்த செயலி மூலம் நீங்கள் மின் வாரியத்துக்கு புகார் தெரிவிக்கலாம். அதாவது, மொபைல் போனில் இருக்கும் இந்த செயலி மூலம் புகாரை குறிப்பிட்டு பட்டனை தட்டினால், உங்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் தீர்வு கிடைத்துவிடும்.