விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பேருந்து நிலையம் முன்பு கழிவு நீர் செல்வதற்கு சாலை ஓரத்தில் பள்ளங்கள் தோண்டி கால்வாய் அமைக்கும் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. தோண்டிய பள்ளத்தில் பல நாட்களாக கழிவு நீர் தேங்கியுள்ளதால்
அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் கழிவு நீரால் அப்பகுதியில் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. விரைந்து கட்டுமான பணிகளை செய்து தேங்கியுள்ள கழிவு நீரை அகற்ற வேண்டும் என சமூக அலுவலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.