மக்கள் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகளுக்கு தீர்வு

65பார்த்தது
மக்கள் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகளுக்கு தீர்வு
அருப்புக்கோட்டை வட்ட சட்ட பணிகள் குழு சார்பாக அருப்புக்கோட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இந்த தேசிய மக்கள் நீதிமன்றம் அருப்புக்கோட்டை சார்பு நீதிபதி செல்வன் ஜேசுராஜா தலைமையில் நடைபெற்றது. இந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மோட்டார்
வாகன விபத்து இழப்பீடு கோருரிமை வழக்குகள், சிவில் வழக்குகள்,
ஜீவான்ம்ச வழக்குகள், காசோலை வழக்குகள் மற்றும் இதர
வழக்குகள் சமரசம் பேச விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. பல்வகை வழக்குகளில் மொத்த இழப்பிடு தொகையாக ரூ 10, 79, 000 பெறப்பட்டது. வங்கிகளுக்கான முன் வழக்குகள் மக்கள் நீதிமன்றத்தில் சமரசம் பேச எடுத்து கொள்ளப்பட்டு,
19 முன் வழக்குகள் அருப்புக்கோட்டை மக்கள் நீதிமன்றத்தில் தீர்வு காணப்பட்டு, ரூ. 16, 87, 500 க்கு தீர்வு காணப்பட்டது. மொத்தமாக ரூ 27, 66, 500 க்கு தீர்வு காணப்பட்டது. இதில் அருப்புக்கோட்டை முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி பத்மநாபன், வழக்கறிஞர் சங்க செயலாளர் ராஜேந்திரன், வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற அலுவலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.