புதிய உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் விழா

1047பார்த்தது
புதிய உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் விழா
சாத்தூர், பிப். 13:
சாத்தூர் நகர தலைவர் குருசாமி தலைமையில் திமுக கட்சி உறுப்பினர்கள் கூட்டம் படந்தால் பகுதியில் நடைபெற்றது. கூட்டத்தில் திமுகவில் புதிதாக உறுப்பினர் சேர்க்கை நடை பெற்றது. அதில் ஒருபகுதியாக 1400 உறுப்பினர்களுக்கு சென்னை தலைமை கழகத்தில் இருந்து வரபெற்ற உறுப்பினர் அட்டையை கிழக்கு ஒன்றிய செயலாளர் முருகேசன் வழங்கினார். நிகழ்ச்சியில் மேற்கு ஒன்றிய செயலாளர் கடற்கரைராஜ், 18 வது வார்டு பிரதிநிதி பாண்டி, நகர இளைஞர் அணி அமைப்பாளர் மற்றும் நகர் மன்ற உறுப்பினர் சங்கர் நகர்மன்ற உறுப்பினர்கள் பூமாரிமுத்து, செல்வி, ஆகியோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி