விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம் பாம்பாட்டி கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம், 15 ஆவது நிதி குழு மானியம் மற்றும் கனிமவள நிதியின் கீழ் சுமார் 42. 65 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட ஊராட்சி செயலக கட்டிடத்தை தமிழ்நாடு நிதி, மின்சாரம் மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம்தென்னரசு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.