விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே மல்லாங்கிணற்றில் தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் தென்சென்னை பாராளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோரின் தந்தையுமான முன்னாள் வணிகவரித்துறை அமைச்சர் அமரர். வே. தங்கப்பாண்டியன் அவர்களின் 27 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரி நிறுவனத் தலைவர் முத்துராமலிங்கம் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். உடன் தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு. முன்னாள் காவல்துறை ஐஜி சந்திரசேகர் உட்பட பலர் இருந்தனர்.