"தொழுநோய் பரிசோதனைகள் பிப்.13 தொடங்கி பிப்.28 வரை நடைபெறுகிறது. இதில் கடந்த 13-ம் தேதி மட்டும் 133 வட்டாரங்களிலும், 27 நகரப்பகுதிகளிலும் 3,42,241 வீடுகளில் 10,67,675 பேர் பயன்பெறும் வகையில் பரிசோதனைகள் நடைபெற்றது. தொழுநோய் பரிசோதனைகளுக்கான அறிகுறிகள் இருப்பவர்களை கண்டறிந்து அவர்களிடத்தில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வீடாக தேடிச் சென்று பரிசோதனைகள் செய்யும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது" என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.