விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே மல்லாங்கிணற்றில் திமுக இளைஞரணி சார்பில் நடைபெற்ற சமூக வலைதள பயிற்சி முகாமினை தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு துவக்கி வைத்தார். இதில் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ஜி பி ராஜா, திமுக மருத்துவரணி செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் எழிலன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கிருஷ்ணகுமார், துணை அமைப்பாளர்கள் சிதம்பரபாரதி, சேகர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.