*நரிக்குடி அருகே வேலானூரணி ஊராட்சியில் அதிமுக ஊராட்சி மன்றத் தலைவர் தலைமையிலும், அதிமுக துணை சேர்மன் முன்னிலையிலும் சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் தூய்மைப் பணியாளர்கள் கெளரவிப்பு*
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வேலானூரணி ஊராட்சியில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் அங்காளஈஸ்வரி ரவிச்சந்திரன் தலைமையிலும், நரிக்குடி ஒன்றிய அதிமுக துணை சேர்மன் அம்மன்பட்டி ரவிச்சந்திரன் முன்னிலையிலும் நடைபெற்றது.
இந்த கிராம சபைக் கூட்டத்தில் ஊராட்சியில் சிறப்பாக பணியாற்றிய தூய்மைப் பணியாளர்கள் கெளரவிக்கப் பட்டனர்.
மேலும், இந்த கிராம சபைக் கூட்டத்தில் வேலானூரணி ஊராட்சியில் கிராம செழுமை வளர்ச்சித் திட்டத்தை செயல்படுத்தப்படுத்திட கிராம சபைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதேபோன்று, இளைஞர்கள் திறன் வளர்ப்பு பயிற்சி குறித்தும் கூட்டத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும் வடகிழக்கு பருவமழை காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டது.
மேலும் வேலாணூரணி ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் பள்ளி இடைநிற்றல் மாணவர்களை கண்டறிந்து அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்த்தல் உள்ளிட்ட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.