விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே மந்திரிஓடை ராமு சீதா பாலிடெக்னிக் கல்லூரி எதிர்புறம் ராஜா என்பவரின் வீட்டில் பாம்பு இருப்பதாக இன்று (ஜூலை-29) காரியாபட்டி தீயணைப்பு துறையினருக்கு தகவல் வந்தது. இந்த தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்து சென்ற காரியாபட்டி தீயணைப்பு வீரர்கள் வீட்டிற்குள் பதுங்கி இருந்த சுமார் 4 அடி நீளமுள்ள கொம்பேறி மூக்கன் பாம்பை லாவகமாக பிடித்து காட்டுப் பகுதியில் விட்டனர்.