*விருதுநகரில் வீட்டில் பதுக்கிய 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்த ஊரகக் காவல் துறையினர். *
விருதுநகர் அருகே உள்ள ரோசல் பட்டி பஞ்சாயத்தில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக ஊரக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது இந்த தகவலின் அடிப்படையில் அந்த பகுதியில் ஊரகக் காவல்துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர்.
இதில் திரவியநாதபுரத்தைச் சேர்ந்த சூர்யா (24) அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த சுருப்பசாமி என்ற விஜய் (23) ஆகிய இருவரையும் பிடித்து விசாரணை செய்ததில்
சூர்யா என்பவரது வீட்டில் 10 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.
இந்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் சூர்யா என்பவரது வீட்டிற்கு சென்று அங்கு சோதனையில் ஈடுபட்ட பொழுது 10 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் சூர்யா(24), மற்றும் அண்ணாநகர் தெருவைச் சேர்ந்த விஜய் என்ற கருப்பசாமி (23) ஆகியோரைக் கைது செய்தனர்.
மேலும் இது தொடர்பாக, தலைமறைவாக உள் எடிசன் என்ற ராஜ்கமலை போலீசார் தேடி வருகின்றனர்.