போக்சோ வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை

77பார்த்தது
போக்சோ வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை


விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டி பகுதியைச் சேர்ந்த மொட்டையன் மகன் ஜெயபாக்கியம்(22). இவர் கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் 16ம் தேதி இரவு காரில் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று, திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் துன்புறுத்தல் அளித்தார். இதில் சிறுமி கர்ப்பமானார். இந்நிலையில் சிறுமையை திருமணம் செய்து கொள்ள ஜெபாக்கியம் மறுத்துள்ளார். அருப்புக்கோட்டை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியிடம் செல்போனில் பேசி வந்துள்ளார். இதுகுறித்த புகாரில் அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து ஜெயபாக்கியத்தை கைது செய்தனர். வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் ஜெயா பாக்கியத்திற்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 20 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி பகவதியம்மாள் தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் திலகவதி ஆஜரானார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி