கன்னிப்பெண்களுக்கு வளைகாப்பு நடத்தி வரலட்சுமி பூஜை.

74பார்த்தது
கன்னிப்பெண்களுக்கு வளைகாப்பு நடத்தி வரலட்சுமி பூஜை.

வத்திராயிருப்பு மாரியம்மன் கோயிலில் வரலட்சுமி பூஜையை முன்னிட்டு கன்னிப் பெண்களுக்கு வளைகாப்பு நடத்தி வினோத வழிபாடு நடந்தது.

இங்குள்ள பலகுடி கீழத்தெரு மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வரலட்சுமி பூஜை விழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.

பெண்களால் நடத்தப்படும் இந்த விழாவில் பெண்கள் மட்டுமே கலந்து கொண்டு வழிபாடு செய்வார்கள். பாரம்பரியமாக நடந்து வரும் இவ்விழா இன்று நடந்த வரலட்சுமி பூஜை தினத்தை முன்னிட்டு கோயிலில் கோலாகலமாக நடந்தது. முதல் நாள் இரவு அம்மனுக்கு சர்வ அபிஷேகங்கள் நடத்தப்பட்டு ஐம்பதாயிரம் வளையல்களால் அலங்காரம் நடந்தது. காலை அம்மனுக்கு பெண்கள் பொங்கலிட்டு படையல் வழிபாடு செய்தனர். சிறப்பு பூஜைகளும் திருமஞ்சன வழிபாடும் நடந்தது.

கோயிலின் முன் பெண்கள் பஜனை பாடி பூர்வாங்க பூஜைகள் செய்தனர். அதனைத் தொடர்ந்து திருமணமாகாத கன்னிப் பெண்கள், கர்ப்பிணிகள் ஆகியோர் கோயிலின் முன்பாக அமர வைக்கப்பட்டு, அவர்களுக்கு மூத்த பெண்கள் அம்மனின் மீது சாத்தப்பட்டிருந்த வளையல்களை எடுத்து வளைகாப்பு அணிவித்தனர்.

இவ்வாறு செய்வதால் திருமணம் ஆகாத பெண்களுக்கு திருமணம் நடைபெறும் என்றும் திருமணம் ஆன பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கை.

தொடர்புடைய செய்தி