போக்குவரத்து போலீசார் மாணவ- மாணவிகளுக்கு விழிப்புணர்வு

65பார்த்தது
ஸ்ரீவில்லிபுத்தூர் தனியார் பள்ளியில் இன்று போக்குவரத்து காவல்துறை சார்பில் பள்ளி மாணவ - மாணவிகளுக்காக நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் போக்குவரத்து சார்பு ஆய்வாளர் தர்மராஜ் மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் கலந்து கொண்டு பள்ளி மாணவ மாணவிகள் சாலையில் செல்லும் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் மற்றும் போக்குவரத்து போலீசார் பயன்படுத்தும் சைகைகள் குறித்த விழிப்புணர்வு உள்ளிட்டவைகள் செயல்முறை காட்சியாக செய்து காட்டப்பட்டது.

மேலும் பள்ளி படிப்பு படித்து வரும் மாணவ- மாணவிகள் இருசக்கர வாகனங்களை இயக்கக் கூடாது என்றும் அது குற்றச்செயல் என்றும் அதற்காக அவர்களது பெற்றோர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து பேசிய போக்குவரத்து போலீசார் தினமும் பள்ளிக்கு கிளம்பும்போது 5 நிமிடம் முன்பாகவே வீட்டில் இருந்து புறப்பட வேண்டும் என தங்களது பெற்றோர்களுக்கு மாணவ-மாணவிகள் அறிவுறுத்த வேண்டும் என்றும் பள்ளி நேரத்தை பின்பற்ற வாகனங்களில் அதிவேகமாக செல்லக்கூடாது என தங்களிடம் பெற்றோரிடம் வலியுறுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி மாணவ-மாணவிகள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள் போக்குவரத்து போலீசார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி