குப்பை கொட்ட இடம் இல்லாமல் திணறும் நகராட்சி

63பார்த்தது
ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் தினசரி சேகரமாகும் 60 டன் குப்பையை தரம் பிரித்து வழங்குவதற்காக திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் ரூ. 5 கோடிக்கு கடந்த ஆண்டு மே மாதம் டெண்டர் விடப்பட்டது. சில மாதங்களிலேயே தூய்மை பணி ஒப்பந்தம் எடுத்த தனியார் நிறுவனம் போதிய ஒப்பந்த பணியாளர்களை நியமிக்காததால் சுகாதர பணிகள் பாதிக்கப்படுவதாக கூறி ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து ஏற்கனவே நகராட்சியில் தூய்மை பணி மேற்கொண்ட தனியார் ஒப்பந்த நிறுவனத்திற்கு தற்காலிகமாகp தூய்மை பணி மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. வீடுகளில் சேகரிக்கும் குப்பைகளை சிவகாசி சாலையில் நீதிமன்றம் அருகே உள்ள குப்பை கிடங்கில் கொட்டி தரம் பிரிக்கப்பட்டது. குப்பை கிடங்கு இருந்த இடத்தில் ரூ. 16 கோடியில் புதிய பேருந்து நிலையம் கட்டுப்படுவதாலும், நான்கு வழிச்சாலை பணி நடப்பதாலும் குப்பை கொட்டுவதற்கு இடம் இல்லை. இதனால் நகரில் பல்வேறு இடங்களில் குப்பையை கொட்டி தீ வைப்பதால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது.
இந்நிலையில் மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில்
ஶ்ரீவில்லிபுத்தூர் மின் மயானம் பின்புறம் கண்மாய் கரையில் குப்பையை கொட்டுவதால் கண்மாய் நீர் மாசடையும் சூழல் நிலவுகிறது. அந்த குப்பையில் இரு நாட்களுக்கு முன் இரவு நேரத்தில் தீப்பற்றி எரிந்ததில் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியது.

தொடர்புடைய செய்தி