ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீர்

2928பார்த்தது
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே லட்சுமியாபுரம் ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியதால் வாகனங்கள் செல்ல முடியவில்லை. இதனால் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து நீரில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

லட்சுமியாபுரம் - நுர்சாகிபுரம் இடையே ரயில்வே சுரங்கப்பாதை உள்ளது. இந்த வழியாக நுர்சாகிபுரம், இடையபொட்டல்பட்டி, அழகு தேவேந்திரபுரம், பாலசுப்பிரமணியபுரம், துலக்கன்குளம், ஆகிய ஊர்களுக்கு பேருந்து மற்றும் வாகனங்கள் சென்று வருகிறது.

மழைக்காலங்களில் சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்குவதால் 10 கி. மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. கடந்த ஆண்டு நீரில் சிக்கி அரசு பேருந்து பழுதடைந்ததால், சுரங்கப்பாதையில் மழைநீரில் தேங்கினால் இவ்வழியாக பேருந்து இயக்கப்படுவதில்லை.

கடந்த நவம்பர் மாதம் சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரை அகற்றக்கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட போது, வட்டாட்சியர் செந்தில்குமார், இன்ஸ்பெக்டர் சங்கர்கண்ணன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி, தற்காலிகமாக மாற்றுப்பாதை வசதி ஏற்படுத்தப்படும் என உறுதி அளித்தனர்.

ஆனால் மாற்றுப்பாதை அமைப்பதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ரயில்வே சுரங்கப்பாதையில் 4 அடி உயரத்திற்கு மேல் மழைநீர் தேங்கியது. இதனால் வன்னியம்பட்டி அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் இன்று பள்ளிக்கு செல்லவில்லை.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி