ஸ்ரீவில்லிபுத்துார் அருகே சதுரகிரி மலையில் தொடர் மழை காரணமாக வெள்ள பெருக்கு. கோயிலுக்கு செல்லும் ஓடைகளில் நீர்வரத்து அதிகரிப்பு.
விருதுநகர் மாவட்டம்,
ஸ்ரீவில்லிபுத்துார் அருகே உள்ள வத்திராயிருப்பு மற்றும் சுற்று பகுதி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பலத்த கனமழையால் சதுரகிரி மலையில் வெள்ள பெருக்கு. மேலும் மிகவும்பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலானது கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு மாதந்தோறும் பிரதோஷம், அமாவாசை, பெளர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்கள் மட்டுமே பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி என்பது வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக வத்திராயிருப்பு சுற்றுவட்டார பகுதிகளிலும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியிலும் பெய்து வரும் மழையின் காரணமாக சதுரகிரி கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள மாங்கனி ஓடை, சங்கிலி பாறை, கருப்பசாமி கோயில் ஓடை உள்ளிட்ட ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. நேற்று இரவு பெய்த கன மழை காரணமாக தற்போது ஓடைகளில் நீர் சற்று அதிகமாக காணப்பட்டு வெள்ள பெருக்கு ஏற்பட்டன. இதனால் வரக்கூடிய விசேஷ நாட்களில் சதுரகிரி கோவிலுக்கு பக்கதர்கள் செல்ல அனுமதி கிடைக்குமா? என எதிர்பார்ப்பில் பக்தர்கள் காத்திருக்கின்றனர்.