சிவகாசி அருகே பரபரப்பு. சுகாதார நிலையம் அருகே கிடந்த பெண் குழந்தை. 17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய பேராசிரியர் கைது.
விருதுநகர் மாவட்டம்,
சிவகாசி அருகே ஆமத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே உள்ள காலி மனையில் பிறந்து இரண்டு நாட்கள் ஆன பெண் குழந்தை அழுதபடி கடந்த நவ. 15 ஆம் தேதி அப்பகுதி பொதுமக்கள் குழந்தையை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் காலி மனையில் மீட்டு குழந்தை சம்பந்தமாக போலீசாரின் விசாரணையில், குழந்தையின் தாய் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய கல்லூரி மாணவி என்றும், திருமணமாகாமல் குழந்தையை பெற்றெடுத்தது தெரிந்தது. மேலும் சிறுமியிடம் குழந்தையின் தந்தை யார் என விருதுநகர் மகளிர் போலீசார் விசாரித்தனர். விசாரணையில் ஆமத்தூரைச் சேர்ந்தவர் விவேக் 35. இவர் தனியார் பொறியியல் கல்லூரியில் தற்காலிக பேராசிரியராக பணிபுரிகிறார் என்றும், இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவரின் வீட்டில் சிறுமி குடியிருந்த போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு தனிமையில் இருந்தனர். இதனால் சிறுமி கர்ப்பமானது தெரிந்தது. இதை அடுத்து விருதுநகர் மகளிர் காவல் நிலையத்தில் விவேக் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து, கைது செய்து ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் சிறையில் அடைத்தனர்.